Thursday, August 16, 2018

English lessons -10 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

What is happening here? இங்கு என்ன நடக்கிறது?
Present Continuous Tense- Making questions Present Continuous Tense -கேள்விகளை உருவாக்குதல்
   
What are you doing?  நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
I am drawing a picture.       நான் படம் வரைந்து கொண்டிருக்கிறேன்.
The picture is very beautiful.  படம் மிகவும் அழகாக உள்ளது.
But what is that woman doing in the picture?  ஆனால் படத்திலுள்ள அந்தப் பெண்மணி என்ன செய்து கொண்டிருக்கிறாள்?
She is teaching her son.  அவள் தனது மகனிற்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறாள்.
Ok. What is that man doing there?  சரி. அந்த நபர் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்?
He is farming.   அவர் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.
What is that girl doing with the doll?  அச்சிறுமி பொம்மையுடன் என்ன செய்து கொண்டிருக்கிறாள்?
She is playing with the doll. அவள் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறாள்?
Why are you making this picture? நீங்கள் ஏன் இப்படத்தைத் தயாரிக்கிறீர்கள்?
I am making this picture for a competition. நான் இப்படத்தை ஒரு போட்டிக்காக தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.
All the best for your competition உங்கள் போட்டிக்கு எனது வாழ்த்துக்கள்
Thank you.  நன்றி.
You're Welcome. பரவாயில்லை.
   
Is Reeta singing? ரீட்டா பாடக்கொண்டிருக்கிறாளா?
Are they talking to the teacher? அவர்கள் ஆசிரியருடன் பேசிக் கொண்டிருக்கிறார்களா?
Am I playing well? நான் நன்றாக விளையாடுகிறேனா?
What's happening in the market? சந்தையில் என்ன நடக்கிறது?
Where are you working? நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள்?
   

No comments:

Post a Comment