Thursday, August 16, 2018

English lessons -26 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

What were you doing? நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
Making questions in Past continuous Tense' Past continuous Tense' இல் வினாக்களை அமைத்தல்.
   
Hello Ravi ஹலோ ரவி
Hi Swati ஹாய் ஸ்வாதி
What were you doing yesterday? நேற்று நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
I was watching a film about Mahatma Gandhi. நான் மகாத்மா காந்தியினைப் பற்றிய ஓர் ஃபிலிம்மினைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
That sounds interesting. Tell me  more about it. அதைக் கேட்பதற்கு சுவாரஸ்யமாக உள்ளது. அதைப் பற்றி இன்னும் அதிகம் சொல்.
   
The film started with his non violent protest  in South Africa after he was thrown off the train. அந்த ஃபிலிம் தென் ஆப்பிரிக்காவில் அவர் டிரெய்னிலிருந்து விரட்டி விடப்பட்டபோது அவர் செய்த அஹிம்சைப் போராட்டத்துடன் தொடங்கியது.
Was he travelling without a ticket? அவர் டிக்கெட் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்தாரா?
No, he wasn’t travelling without a ticket. இல்லை, அவர் டிக்கெட் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கவில்லை.
He was thrown off as he was travelling in the First class compartment.  அவர் முதல் வகுப்பு கம்பார்ட்மென்ட்டில் பயணித்துக் கொண்டிருந்ததால் அவர் விரட்டியடிக்கப்பட்டார்.
 Indians were not allowed to travel in the first class compartments. இந்தியர்கள் முதல் வகுப்பு கம்பார்ட்மென்டில் பயணிப்பதற்கு அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை.
What was he protesting against? அவர் எதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்?
He was protesting against the unfair laws for Indians living in South Africa.  அவர் தென் ஆப்பிரிக்காவில் வசித்து வரும் இந்தியர்களுக்கு சாதகமல்லாத சட்டங்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்.
Later, he came to India and fought for its independence from the British. பின்னர், அவர் இந்தியாவிற்கு வந்து பிரிட்டிஷிடமிருந்து அதன் விடுதலைக்காகப் போராடினார்.
Who were supporting him in India? இந்தியாவில் அவரை ஆதரித்துக் கொண்டிருந்தவர்கள் யார்?
Millions of Indians were supporting him and after a lot of struggle, India got independence.  இலட்சக்கணக்கான இந்தியர்கள் அவரை ஆதரித்துக் கொண்டிருந்தனர், மேலும் பல போராட்டங்களுக்குப் பின்னர், இந்தியா விடுதலையடைந்தது.
He was assassinated in 1948. அவர் 1948இல் படுகொலை செய்யப்பட்டார்.
What was he doing when he was assassinated? அவர் படுகொலை செய்யப்பட்ட போது அவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
He was going to meet his followers after the evening prayer. அவர் மாலைப் பிரார்த்தனைக்குப் பின்னர் தனது சீடர்களைச் சந்திக்கச் சென்று கொண்டிருந்தார்.
The film is quite interesting. ஃபிலிம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது.
 I should watch it. நான் அதனைப் பார்க்க வேண்டும்.
   
UNDERSTANDING CONCEPTS கருத்துக்களைப் புரிந்து கொள்தல்
Making questions in "Past continuous tense" "Past continuous tense"இல் வினாக்களை அமைத்தல்.
Questions can be formed in the Past Continuous Tense by using ‘was’/ ‘were’ and ‘WH words’.  ‘was’/ ‘were’ மற்றும் ‘WH words’ ஆகியவற்றினைப் பயன்படுத்துவதன் மூலம் Past Continuous Tense இல் வினாக்களை அமைக்க முடியும்.
‘Not’ is added after ‘was’/ ‘were’ to form negative questions in the Past Continuous Tense – was not (wasn’t), were not (weren’t).  Past Continuous Tenseஇல் எதிர்மறை வினாக்களை அமைப்பதற்கு ‘was’/ ‘were’ க்குப் பின்னர் ‘Not’ சேர்க்கப்படுகின்றது – was not (wasn’t), were not (weren’t). 
Making Positive and Negative Questions with ‘was’ and ‘were’ in Past Continuous Tense Past Continuous Tenseஇல் ‘was’ மற்றும் ‘were’ ஆகியவற்றுடன் நேர்மறை மற்றும் எதிர்மறை வினாக்களை அமைத்தல்
Was he playing football? அவன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்தானா?
Were they studying in the morning? அவர்கள் காலையில் படித்துக் கொண்டிருந்தார்களா?
wasn't she talking to him/ her? அவள் அவனிடம் / அவளிடம் பேசிக்கொண்டிருக்கவில்லையா?
Weren't they watching the match? அவர்கள் மேட்சினைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லையா?
Making Positive and Negative Sentences in Past Continuous Tense  using ‘WH Words' ‘WH words’ ஐப் பயன்படுத்தி Past Continuous Tense இல் நேர்மறை மற்றும் எதிர்மறை வினாக்களை அமைத்தல்
What was he doing there? அவன் அங்கே என்ன செய்து கொண்டிருந்தான்?
Where were they going? அவர்கள் எங்கே சென்று கொண்டிருந்தார்கள்?
When were they coming? அவர்கள் எப்போது வந்து கொண்டிருதார்கள்?
How was she working there? அவள் அங்கே எவ்வறு வேலை செய்து கொண்டிருந்தாள்?
Why weren't they going to the college? அவர்கள் ஏன் காலேஜிற்குச் சென்று கொண்டிருக்கவில்லை?
Who wasn't singing the song? பாடலைப் பாடாமல் இருந்து கொண்டிருந்தது யார்?
   
Was Ravi going to the school? ரவி ஸ்கூலிற்குச் சென்று கொண்டிருந்தானா?
Why were they sitting there? அவர்கள் ஏன் அங்கே அமர்ந்து கொண்டிருந்தனர்?
Were you talking to him? நீங்கள் அவரிடம் பேசிக்கொண்டிருந்தீர்களா?
Were the children playing on the road? குழந்தைகள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்களா?
Why were they going? அவர்கள் ஏன் சென்று கொண்டிருந்தனர்?
   
Were they going to the school? அவர்கள் ஸ்கூலிற்குச் சென்று கொண்டிருந்தார்களா?
What was he doing there? அவன் அங்கே என்ன செய்து கொண்டிருந்தான்?
Where were they going? அவர்கள் எங்கே சென்று கொண்டிருந்தார்கள்?
Was he eating? அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தானா?
Why were you going there? நீங்கள் ஏன் அங்கு சென்றுகொண்டிருந்தீர்கள்?
   

No comments:

Post a Comment