I was busy. | நான் வேலையாக இருந்தேன். |
Using Simple past tense and Present continuous tense. | Simple past tense and Present continuous tense ஐப் பயன்படுத்துதல். |
Hello Riya, how are you? | ஹலோ ரியா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
Hello Anuj, I am fine. | ஹலோ அனுஜ், நான் நன்றாக இருக்கிறேன். |
Where were you yesterday? | நீங்கள் நேற்று எங்கே இருந்தீர்கள்? |
I was at a friend’s house. | நான் ஓர் நண்பனின் வீட்டில் இருந்தேன். |
I called up your house yesterday. | நேற்று நான் உனது வீட்டிற்கு தொலைபேசி செய்திருந்தேன். |
I was on the way when you were calling me. | நீங்கள் என்னை அழைத்துக் கொண்டிருந்த போது நான் அங்கே சென்று கொண்டிருந்தேன். |
Why didn’t you call me on my mobile? | நீங்கள் ஏன் எனது மொபைலிற்கு அழைக்கவில்லை? |
I forgot your mobile number. | நான் உனது மொபைல் நம்பரை மறந்துவிட்டேன். |
What were you doing at your friend’s house? | நீங்கள் உங்களது நண்பனின் வீட்டில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? |
We were watching the new ‘Harry Potter’ movie together. | நாங்கள் புதிய 'ஹாரி பாட்டர்' மூவியினை ஒன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். |
We also played cricket in his garden. | நாங்கள் அவரது தோட்டத்தில் கிரிக்கெட்டும் விளையாடினோம். |
Did you enjoy the movie and the cricket? | மூவி மற்றும் கிரிக்கெட்டினை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவித்தீர்களா? |
The movie was very good. | மூவி மிகவும் நன்றாக இருந்தது. |
But I didn’t enjoy playing cricket. | ஆனால், நான் கிரிக்கெட் விளையாடுவதை அனுபவிக்கவில்லை. |
Why? | ஏன்? |
It started to rain when we were playing. | நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. |
Ok. But I am happy that you liked the movie. | சரி. ஆனால் உங்களுக்கு அந்த மூவி பிடித்திருக்கின்றது என்பதைக் குறித்து நான் மகிழ்கிறேன். |
Yes, it was also the last movie of this series. | ஆம், அதுதான் அந்த வரிசையில் வந்த இறுதி மூவியாகவும் இருந்தது. |
I watched this movie last week and liked it a lot. | நான் இந்த மூவியினைக் கடந்த வாரம் பார்த்தேன், எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. |
UNDERSTANDING CONCEPTS | கருத்துக்களைப் புரிந்துகொள்தல் |
In the previous conversation, you heard sentences from both the Simple Past Tense and Past Continuous Tense. | முந்தைய உரையாடலில், Simple Past Tense and Past Continuous Tense ஆகிய இரண்டிலிருந்தும் நீங்கள் வாக்கியங்களைக் கேட்டீர்கள். |
Simple Past Tense is used to talk about those actions that happened in the past. | Simple Past Tense ஆனது கடந்த காலத்தில் நடைபெற்ற செயல்களைப் பற்றிப் பேசுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. |
Past Continuous is used to talk about those
actions that were in progress in the past. |
Past Continuous ஆனது கடந்த காலத்தில் செயல்பாட்டில் இருந்த செயல்களைப் பற்றிப் பேசுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. |
When we use these two forms in the same
sentence, we use: |
இந்த இரு வடிவங்களையும் ஒரே வாக்கியத்தில் நாம் பயன்படுத்தும்போது, இவ்வாறாக நாம் பயன்படுத்துகின்றோம்: |
Past Continuous: to talk about actions that were in progress in the past. | Past Continuous: கடந்த காலத்தில் செயல்பாட்டில் இருந்த செயல்களைப் பற்றிப் பேசுவதற்கு. |
and | மற்றும் |
Past Simple :
to talk about action that were completed in the past. |
Past Simple : கடந்த காலத்தில் நிறைவு பெற்றுவிட்ட செயல்களைப் பற்றிப் பேசுவதற்கு. |
Difference between Simple Past & Past Continuous | Simple Past & Past Continuous ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசம். |
action that happened in the past | கடந்த காலத்தில் நடைபெற்ற செயல் |
action that was in progress in the past | கடந்த காலத்தில் செயல்பாட்டில் இருன்ட செயல் |
I played football. | நான் ஃபுட்பால் விளையாடினேன். |
I was playing football. | நான் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்தேன். |
I was playing football when it started to rain. | மழை பெய்யத் துவங்கியபோது நான் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்தேன். |
They came home. | அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். |
They were coming home. | அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். |
I was watching a movie when you came home. | நீங்கள் வீட்டிற்கு வந்த போது நான் ஓர் மூவியினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். |
He met her. | அவன் அவளைச் சந்தித்தான். |
He was meeting her. | அவன் அவளைச் சந்தித்துக் கொண்டிருந்தான். |
I was taking shower when you called me. | நீங்கள் என்னை அழைத்த போது நான் குளித்துக் கொண்டிருந்தேன். |
I bought a watch yesterday | நேற்று நான் ஓர் கைக்கடிகாரத்தை வாங்கினேன். |
She was at her friend's house. | அவள் தனது தோழியின் வீட்டில் இருந்தாள். |
She was reading a poem. | அவள் ஓர் செய்யுளை வாசித்துக் கொண்டிருந்தாள். |
I was writing a letter. | நான் ஓர் கடிதத்தினை எழுதிக் கொண்டிருந்தேன். |
He/ she taught me to speak English. | அவன் / அவள் எனக்கு ஆங்கிலத்தில் பேசக் கற்றுக் கொடுத்தாள். |
I was busy. | நான் வேலையாக இருந்தேன். |
I was there. | நான் அங்கே இருந்தேன். |
They stayed in the hotel. | அவர்கள் ஹோட்டலில் தங்கினார்கள். |
They were staying in the hotel. | அவர்கள் ஹோட்டலில் தங்கிக் கொண்டிருந்தார்கள். |
They were playing in the park. | அவர்கள் பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். |
Learn English free online with lessons, grammar tutorials, verb guides, blogs, vocabulary lists, phrases, idioms, and more ! Find help with your English here. Learn the basics of English. Learning some basic English lessons.
Thursday, August 16, 2018
English lessons -27 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment