Thursday, August 16, 2018

English lessons -7 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

Showing Possession  உடைமையைக் காண்பித்தல்
Use of possessive adjectives like my, your, his, her, our, their. my, your, his, her, our, their போன்ற possessive adjectives இன் பயன்பாடு 
Use of possessive pronouns like mine, yours, his, hers, ours, theirs. mine, yours, his, hers, ours, theirs போன்ற possessive pronouns இன் பயன்பாடு 
Riya, can you help me sort out things? ரியா, என்னுடைய பொருட்களை வரிசைப்படுத்த உன்னால் எனக்கு உதவமுடியுமா?
Sure. Whose candles are these? நிச்சயமாக. இந்த மெழுகுவர்த்திகள் யாருடையது?
They belong to Rahul.  அவை ராகுலுக்கு சொந்தமானவை.
Give him his candles. அவருக்கு அவருடைய மெழுகுவர்த்திகளைத் தந்துவிடவும்.
Ok. Is this knife yours? சரி. இது உங்களுடைய கத்தியா?
No, this is not mine.  இல்லை, இது என்னுடையதில்லை.
This is Priya’s knife.  இது ப்ரியாவின் கத்தி.
This watch is mine.  இந்த கடிகாரம் என்னுடையது.
Ok. Whose books are these? சரி. இந்தப் புத்தகங்கள் யாருடையது?
These books are ours.  இந்தப் புத்தகங்கள் எங்களுடையது.
Give the car keys to Rahul and Priya. காரின் சாவிகளை ராகுல் மற்றும் ப்ரியாவிற்கு தந்துவிடவும்.
 It is theirs. அது அவர்களுடையது.
Ok. சரி.
 
This is my book. இது என்னுடைய புத்தகம்.
This is our house. இது என்னுடைய வீடு.
This is my bag. Where is yours? இந்த பேக் என்னுடையது. உங்களுடையது எங்கே?
This is his/her phone. Where is mine? இந்த ஃபோன் அவருடையது/அவளுடையது. என்னுடையது எங்கே?
Our car is red. Theirs is black. எங்கள் கார் சிவப்பு நிறம். அவர்களுடையது கருப்பு.

No comments:

Post a Comment