Thursday, August 16, 2018

English lessons -25 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

I watched cricket match yesterday. நேற்று நான் கிரிக்கெட் மேட்சினைப் பார்த்தேன்.
Making sentences in 'Past Continuous tense" Past Continuous tense" இல் வாக்கியங்களை அமைத்தல்.
   
Hello  Riya ஹலோ ரியா
Hello Ravi ஹலோ ரவி
Yesterday, I went to see the India- Australia cricket match. நேற்று நான் இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் மேட்சினைப் பார்ப்பதற்கு சென்றிருந்தேன்.
Wow! How was your experience? வாவ்! உங்களுடைய அனுபவம் எப்படி இருந்தது?
Awesome! The stadium was packed with spectators.  அருமையாக இருந்தது! ஸ்டேடியம் பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது.
They were cheering the players. அவர்கள் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
I was also cheering for Dhoni when he was hitting boundaries தோனி எல்லைக் கோடுகளை நோக்கி பந்தினை அடித்துக் கொண்டிருக்கும்போது நானும் அவரை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தேன்.
The drummer was playing drums on every run in the last over and the audience was dancing இறுதி ஓவரின் ஒவ்வொரு ரன்னிற்கும் டிரம்மர் டிரம்களை இசைத்துக்  கொண்டிருந்தார், பார்வையாளர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.
Some Australians were sitting next to me.  சில ஆஸ்திரேலியன்ஸ் எனக்கு அருகில் அமர்ந்திருந்தனர்.
They were feeling nervous when India was chasing the target. இந்தியா இலக்கினை நெருங்கிக் கொண்டிருந்த போது அவர்கள் மிகவும் பதட்டத்துடன் இருந்தனர்.
India won the match in the end. இறுதியில் இந்தியா மேட்சினை வென்றது.
Was there something you did not like? உனக்குப் பிடிக்காத ஏதேனும் இருந்ததா?
Yes, I did not like some people who were  littering around. ஆம், சுற்றிலும் அசுத்தப்படுத்திக் கொண்டிருந்த சில நபர்களை எனக்குப் பிடிக்கவில்லை.
Also, the food at the stalls was being sold at very high rates. மேலும், ஸ்டால்களில் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்த உணவு மிகவும் விலையுயர்ந்ததாக இருந்தது.
Didn’t you watch this match, Riya? நீங்கள் இந்த மேட்சினைப் பார்க்கவில்லையா, ரியா?
No, I was sleeping at that time. இல்லை. அந்த நேரத்தில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன்.
   
UNDERSTANDING CONCEPTS கருத்துக்களைப் புரிந்துகொள்தல்
Past Continuous Tense Past Continuous Tense
The Past Continuous is used to talk about an action  going on in the past. கடந்த காலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஓர் செயலினைப் பற்றிப் பேசுவதற்கு  Past Continuous பயன்படுத்தப்படுகின்றது.
For example, if someone asks you what you were doing yesterday, then you will answer using Past Continuous Tense உதாரணமாக, யாரேனும் ஒருவர் உங்களிடம் நேற்று நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்டால், நீங்கள் Past Continuous ஐப் பயன்படுத்தி விடையளிப்பீர்கள்.
It is not necessary to mention the time of action here. இங்கு செயல் நடைபெற்ற நேரத்தினக் குறிப்பிடுவது அவசியமானது அல்ல.
Making positive sentences நேர்மறை வாக்கியங்களைஅமைத்தல்
Doer செய்பவர்
Verb வினைச்சொல்
Remaining sentence மீதமுள்ள வாக்கியம்
Meaning பொருள்
I was playing football நான் ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருந்தேன்.
She was playing football அவள் ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருந்தாள்.
He was playing football அவன் ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருந்தான்.
You were playing football நீங்கள் ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருந்தீர்கள்.
They were playing football அவர்கள் ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
We were playing football நாங்கள் ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருந்தோம்.
Making negative sentences எதிர்மறை வாக்கியங்களை அமைத்தல்
I wasn't playing football நான் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருக்கவில்லை.
She wasn't playing football அவள் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருக்கவில்லை.
He wasn't playing football அவன் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருக்கவில்லை.
You weren't playing football நீங்கள் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருக்கவில்லை.
They weren't playing football அவர்கள் ஃபுட்பால் விளையடிக் கொண்டிருக்கவில்லை..
We weren't playing football நாங்கள் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருக்கவில்லை.
Ravi was watching the cricket match. ரவி கிரிக்கெட் மேட்சினைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
His mother was sleeping. அவனது தாயார் உறங்கிக் கொண்டிருந்தார்.
It was raining yesterday. நேற்று மழை பெய்து கொண்டிருந்தது.
They were going to the temple. அவர்கள் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
We were waiting for Meeta. நாங்கள் மீத்தாவிற்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.
You were playing in the park. நீங்கள் பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தீர்கள்.
Ravi wasn't watching the cricket match. ரவி கிரிக்கெட் மேட்சினைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
His mother wasn't sleeping. அவனது தாயார் உறங்கிக் கொண்டிருக்கவில்லை.
It wasn't raining yesterday. நேற்று மழை பெய்து கொண்டிருக்கவில்லை.
They weren't  going to the temple. அவர்கள் கோயிலுக்குச் சென்று கொண்டிருக்கவில்லை.
We weren't  waiting for Meeta. நாங்கள் மீத்தாவிற்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை.
You weren't  playing in the park. நீங்கள் பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்கவில்லை.
   
Ravi was going to school. ரவி ஸ்கூலிற்குச் சென்று கொண்டிருந்தான்.
Rosy was reading the book. ரோஸி புத்தகத்தினைப் வாசித்துக் கொண்டிருந்தாள்.
We were watching the movie. நாங்கள் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
You weren't talking to him. நீங்கள் அவனிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை.
The children weren't playing on the street. குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கவில்லை.
They weren't going anywhere. அவர்கள் எங்கேயும் சென்று கொண்டிருக்கவில்லை.
   
Kunal was going to the school. குணால் ஸ்கூலிற்குச் சென்று கொண்டிருந்தான்.
Meeta wasn't driving the car. மீத்தா காரினை ஓட்டிக் கொண்டிருக்கவில்லை.
We were going to sleep. நாங்கள் உறங்கச் சென்று கொண்டிருந்தோம்.
Someone was knocking at the door. யாரோ ஒருவர் கதவினைத் தட்டிக் கொண்டிருந்தார்.
The children weren't studying குழந்தைகள் படித்துக் கொண்டிருக்கவில்லை.
   

No comments:

Post a Comment