Thursday, August 16, 2018

English lessons -15 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

Where can I keep my books? நான் எனது புத்தகங்களை எங்கே வைக்க முடியும்?
Usage of the words used to talk about place like 'Beside, in, under, on, inside, below, above '  Beside, in, under, on, inside, below, above ' போன்று இடத்தினைப் பற்றிப் பேசுவதற்கு பயன்படுத்தப்படும் சொற்களின் பயன்பாடு
   
Hi Riya, this is your room.  ஹாய் ரியா, இது உங்கள் அறை.
There is a cupboard beside the bed.  படுக்கைக்கு அருகில் ஓர் அலமாரி உள்ளது.
ok சரி
You can keep all your things in the cupboard.  நீங்கள் உங்கள் அனைத்துப் பொருட்களையும் அலமாரியில் வைத்துக் கொள்ள முடியும்.
Where can I keep my suitcase? நான் எனது சூட்கேஸினை எங்கே வைக்க முடியும்?
You can keep your suitcase under the bed.  நீங்கள் உங்கள் சூட்கேஸினைப் படுக்கைக்குக் கீழே வைத்துக் கொள்ள முடியும்.
Where can I keep my books? நான் எனது புத்தகங்களை எங்கே வைக்க முடியும்?
You can keep your books on the small shelf or inside the drawer.  நீங்கள் உங்கள் புத்தகங்களை சிறு ஷெல்ஃபின் மீதோ அல்லது டிராயரின் உள்ளோ வைத்துக் கொள்ள முடியும்.
Where can I hang my wall clock and calendar? நான் எனது கடிகாரத்தையும் காலண்டரையும் எங்கே தொங்கவிட முடியும்?
You can hang your calendar above the table and wall clock below the tube light.  நீங்கள் உங்களது காலண்டரை மேஜைக்கு மேலேயும், சுவர்க் கடிகாரத்தை டியூப்லைட்டிற்குக் கீழேயும் தொங்க விட முடியும்.
Thanks, Anuj! நன்றி, அனுஜ்!
   
Our shop is below our house. எமது கடை எங்கள் வீட்டிற்குக் கீழே உள்ளது.
Our neighbours stay/live above our house. எங்கள் அண்டைவீட்டார் எமது வீட்டிற்கு மேலே தங்குகின்றனர் / குடியிருக்கின்றனர்.
My house is on the hill. எனது வீடு மலையின் மீது உள்ளது.
The cow is sitting under the tree. பசு மரத்தடியில் அமர்ந்துள்ளது.
Your shoes are inside the drawer. உங்கள் காலணிகள் டிராயரின் உள்ளே இருக்கின்றன.
   

No comments:

Post a Comment