Thursday, August 16, 2018

English lessons -11 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

I am making chocolates. நான் சாக்லேட்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்
To make sentences using Simple Present and Present Continuous Tense Simple Present and Present Continuous Tense ஐ உபயோகித்து வாக்கியங்களை உருவாக்க
   
What are you doing? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
I’m making chocolates. நான் சாக்லேட்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.
For whom are you making chocolates? யாருக்காக நீங்கள் சாக்லேட்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
I’m making chocolates for my
brother.
நான் எனது சகோதரருக்காகச் சாக்லேட்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றேன்.
He likes chocolates very much. அவருக்கு சாக்லேட்டுகள் மிகவும் பிடிக்கும்.
Is your brother studying? உங்கள் சகோதரர் படித்துக் கொண்டிருக்கிறாரா?
Yes, he is studying. ஆம், அவர் படித்துக் கொண்டிருக்கிறார்.
Do you like chocolates? உங்களுக்கு சாக்லேட்டுகள் பிடிக்குமா?
No, I don’t like chocolates. இல்லை, எனக்கு சாக்லேட்டுகள் பிடிக்காது.
Do you like chocolate ice cream?  உங்களுக்கு சாக்லேட்டு ஐஸ்கிரீம் பிடிக்குமா?
Yes, I like chocolate ice cream.  ஆம், எனக்கு சாக்லேட் ஐஸ்கிரீம் பிடிக்கும்.
   
UNDERSTANDING CONCEPTS கருத்துக்களைப் புரிந்து கொள்ளுதல்
Simple Present Tense Simple Present Tense
Use Simple Present when you want to express that an action is repeated or happens usually. ஒரு செயல் திரும்பத் திரும்ப நிகழ்கிறது அல்லது வழக்கமாக நேர்கிறது என்பதை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என விரும்பும் போது, Simple Present ஐப் பயன்படுத்தவும்
The action can be a habit, hobby, event or something that happens often.   செயல் என்பது ஓர் பழக்கவழக்கம், பொழுதுபோக்கு, நிகழ்வு அல்லது அடிக்கடி நேரும் ஏதேனுமொரு விஷயமாக இருக்கலாம்.
How to make  sentences in Simple Present Tense? Simple Present Tense இல் வாக்கியங்களை எவ்வாறு உருவாக்குவது?
Doer செய்பவர்
Main Verb முக்கிய வினைச்சொல்
I/You/We/They eat apples. நான்/நீங்கள்/நாம்/அவர்கள் ஆப்பிள்களைச் சாப்பிடுகிறேன்/சாப்பிடுகிறீர்கள்/சாப்பிடுகிறோம்/சாப்பிடுகின்றனர்.
He/ She eats apples. அவன்/அவள் ஆப்பிள் சாப்பிடுகிறார்/சாப்பிடுகிறாள்.
I/You/We/They do not eat apples. நான்/நீங்கள்/நாம்/அவர்கள் ஆப்பிள்களைச் சாப்பிடவில்லை.
He/She does not eat apples. அவன்/அவள் ஆப்பிள் சாப்பிடவில்லை.
Examples of 'Simple Present Tense'  'Simple Present Tense' இன் உதாரணங்கள்
I live in Shimla. நான் சிம்லாவில் வசிக்கிறேன்.
I play tennis in the morning. நான் காலையில் டென்னிஸ் விளையாடுகிறேன்.
He eats fruits in the breakfast. அவர் காலை உணவுக்காகப் பழங்களைச் சாப்பிடுகிறார்.
Paris is in France. பாரிஸ் ஃபிரான்ஸில் உள்ளது.
Elephants like to stay in water. யானைகள் நீரில் இருக்க விரும்புகின்றன.
She drinks a lot of water. அவள் நிறைய நீரை அருந்துகிறாள்.
Present Continuous Tense Present Continuous Tense
We use present continuous for those actions that are happening now or are in progress at present தற்சமயம் நடந்து கொண்டிருக்கும் செயல்கள் அல்லது நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கு நாம் present continuous ஐப் பயன்படுத்துகின்றோம்
How to make sentences in  Present Continuous Present continuous இல் வாக்கியங்களை எவ்வாறு உருவாக்குவது
I am cooking dinner. நான் இரவு உணவை சமைத்துக் கொண்டிருக்கிறேன்.
We are playing cricket. நாங்கள் கிரிகெட் விளையாடிக் கொண்டிருக்கிறோம்.
She is reading the newspaper. அவள் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.
   
He eats food at seven in the evening. மாலை ஏழு மணிக்கு அவர் உணவு சாப்பிடுகிறார்.
She is watching a movie. அவள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
He is sleeping in his room.  அவர், தனது அறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார்.
She learns music.  அவள் இசையைப் பயில்கிறாள்.
Monkeys like to eat bananas. குரங்குகளுக்கு வாழைப் பழங்களைச் சாப்பிடப் பிடிக்கும்.
   
I live in Jaipur. நான் ஜெய்ப்பூரில் வசிக்கிறேன்.
Ramesh is eating. ரமேஷ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
Mohan is playing tennis. மோகன் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
They do to the temple everyday. அவர்கள் தினமும் கோயிலுக்குச் செல்கின்றனர்.
We don't eat chocolate. நாங்கள் சாக்லேட் சாப்பிடுவதில்லை.
   

No comments:

Post a Comment