Thursday, August 16, 2018

English lessons -6 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

Talk about your neighbourhood உங்களுடைய அண்டை வீட்டாரைப் பற்றி பேசவும்
To ask  questions using  ‘Is there any’, ‘Are there any’, ‘Does it have’  ‘Is there any’, ‘Are there any’, ‘Does it have’  ஐப் பயன்படுத்தி கேள்விகளைக் கேட்க
Hello Deepika ஹலோ தீபிகா
Hello Rohit ஹலோ ரோஹித்
Tell me about your neighbourhood.  உங்களுடைய அண்டை வீட்டாரைப் பற்றி என்னிடம் கூறுங்கள்.
Are there houses or apartments? அங்கு வீடுகள் அல்லது அபார்ட்மெண்ட்கள் உள்ளனவா?
There are apartments. அங்கு அபார்ட்மெண்ட்கள் உள்ளன.
Are there parks? அங்கு பார்க்குகள் உள்ளனவா?
Yes, there is a big park. ஆம், அங்கு ஓர் பெரிய பூங்கா உள்ளது.
Does it have swings? அதில் ஊஞ்சல்கள் உள்ளதா?
Yes, it has many swings for children. ஆம், குழந்தைகளுக்காக அதில் ஏராளமான ஊஞ்சல்கள் உள்ளது.
Is there a market in your colony? உங்கள் காலணியில் மார்க்கெட் உள்ளதா?
Yes, there is a big market which has many shops. ஆம், அங்கு பல கடைகளுள்ள மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது.
Does it have a grocery store? அதில் மளிகைக்கடை உள்ளதா?
Yes it has a grocery store. ஆம், அதில் மளிகைக்கடை உள்ளது.
Is there a temple? அதில் கோயில் உள்ளதா?
Yes, there is a temple which is very close to my home.  ஆம், எனது வீட்டிற்கு மிகவும் அருகில் ஓர் கோயில் உள்ளது.
Are there schools, hospitals and libraries? அங்கு ஸ்கூல்கள், ஹாஸ்பிட்டல்கள் மற்றும் நூலகங்கள் உள்ளனவா?
There is a school and a hospital but there isn't a library. ஸ்கூல் மற்றும் ஹாஸ்பிட்டல் உள்ளது, ஆனால் நூலகம் இல்லை. 
Is there a bus stop? அங்கு பேருந்து நிறுத்தம் உள்ளதா?
No, the bus stop is a kilometre away. இல்லை, பேருந்து நிறுத்தம் ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி உள்ளது.
That's really a good place! உண்மையிலேயே அதுவொரு நல்ல இடம்!
 
Making Questions using ‘Is there ‘, ‘Are there’, ‘Does it have’
‘Is there ‘, ‘Are there’, ‘Does it have’ ஐப் பயன்படுத்தி கேள்விகளை உருவாக்குதல்
These words are used to ask questions about things. சில விஷயங்களைப் பற்றி கேள்விகளைக் கேட்க இவ்வார்த்தைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன.
Making questions using "Is there” ‘Is there‘ ஐப் பயன்படுத்தி கேள்விகளை உருவாக்குதல்
It is used to ask questions about one thing (singular). ஒரு விஷயத்தைப் பற்றி (ஒருமை) கேள்விகளைக் கேட்க இது பயன்படுத்தப்படுகிறது.
Is there any vacant room in this hotel? இந்த ஹோட்டலில் காலி அறை ஏதேனும் உள்ளதா?
Is there a pencil in the box? பாக்ஸில் ஓர் பென்சில் உள்ளதா?
Making questions using “Are there” “Are there” ஐப் பயன்படுத்தி கேள்விகளை உருவாக்குதல்
It is used to ask questions about  many  things(plural). பல விஷயங்களைப் பற்றி (பன்மை) கேள்விகளைக் கேட்க இது பயன்படுத்தப்படுகிறது.
Are  there vacant rooms in this hotel? இந்த ஹோட்டலில் காலி அறைகள் ஏதேனும் உள்ளனவா?
Are there  pencils in the box? இந்த பாக்ஸில் பென்சில்கள் உள்ளனவா?
Making questions using “Does it have” “Does it have” ஐப் பயன்படுத்தி கேள்விகளை உருவாக்குதல்
It is used to ask questions about the things we have introduced earlier. நாம் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ள விஷயங்களைப் பற்றி கேள்விகள் கேட்க இது பயன்படுத்தப்படுகிறது.
It is used for both singular and plural things. ஒருமை மற்றும் பன்மை ஆகிய இரு விஷயங்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.
Your house is very big? Does it have swimming pool? உங்கள் வீடு மிகவும் பெரியதா? அதில் ஸ்விம்மிங் பூல் உள்ளதா?
Does it have a garden? அதில் தோட்டம் உள்ளதா?
Is there a carpet on the floor? தரையில் கம்பளி விரிப்பு உள்ளதா?
Are there ducks in the pond? குளத்தில் வாத்துக்கள் உள்ளதா?
Is there water in the bottle? பாட்டிலில் நீருள்ளதா?
Your school is very small. Does it have a playground? உங்கள் ஸ்கூல் மிகவும் சிறியது. அதில் விளையாட்டு மைதானம் உள்ளதா?
Are there fruits in the basket? பாஸ்கெட்டில் பழங்கள் உள்ளதா?
Is there water in the jug? ஜக்கில் நீருள்ளதா?
Is there any information about the exams?  பரிட்சைகள் குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா?
This is a new phone. Does it have a camera? இது ஓர் புதிய ஃபோன். அதில் கேமரா உள்ளதா?
Are there clouds in the sky?  ஆகாயத்தில் மேகங்கள் உள்ளதா?
Are there many swings? அங்கு ஏராளமான ஊஞ்சல் உள்ளனவா?

No comments:

Post a Comment