Thursday, August 16, 2018

English lessons -9 Learn English through Tamil Language, Free online spoken english course in Tamil

A scene at the market place சந்தையில் நடக்கும் ஓர் நிகழ்வு
Making simple sentences in Present Continuous Tense   Present Continuous Tense இல் எளிய வாக்கியங்களை உருவாக்குதல்
   
The market is full of fresh fruits.  சந்தை முழுவதும் புத்தம்புதிய பழங்கள் நிறைந்துள்ளன.
Yes, I am buying mangoes. ஆம், நான் மாம்பழங்களை வாங்குகிறேன்.
I am buying grapes for my brother.  எனது சகோதரருக்காக நான் திராட்சைகளை வாங்குகிறேன்.
Look, a child is crying there.  பாருங்கள், அங்கு ஓர் குழந்தை அழுகிறது.
Where is the child? குழந்தை எங்கே?
She is standing on the footpath.  அவள் ஃபுட்பாத்தில் நின்று கொண்டிருக்கிறாள்.
I think she is lost.  அவள் தொலைந்துவிட்டாள் என்று நான் நினைக்கிறேன்.
 No. A woman is buying vegetables there.  இல்லை. அங்கு ஓர் பெண்மணி காய்கறிகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்.
I think she is her mother. அவர்தான், இவளுடைய தாய் என்று நினைக்கிறேன்.
Yes, may be.  ஆம், இருக்கலாம்.
Look, a dog is sleeping on the road there.  பாருங்கள், நாய் அங்கு சாலையில் படுத்துக் கொண்டிருக்கின்றது.
The dog is not sleeping. நாய் படுத்துக் கொண்டிருக்கவில்லை.
 It’s moving its tail. அது தன்னுடைய வாலை ஆட்டுகிறது.
Look, that child is not crying now.  பாருங்கள், அந்தக் குழந்தை இப்பொழுது அழுகவில்லை.
She is playing with the dog. அவள் நாயுடன் விளையாடிக்கொண்டிருக்கிறாள்.
   
The child is playing in the garden. குழந்தை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது.
I am buying this book. நான் இந்தப் புத்தகத்தை வாங்குகிறேன்.
He is eating fruits. அவர் பழங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.
Meeta is singing. மீத்தா பாடிக் கொண்டிருக்கிறாள்.
My mother is working. எனது தாய் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
   

No comments:

Post a Comment